Monday, September 16, 2013
இலங்கை::வட மாகாண சபைத் தேர்தலின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள இனவாத மற்றும் பிரிவினைவாத செயற்பாடுகளை சர்வதேச மட்டத்தில் தோற்கடிப்பதற்கு வடமேல் மற்றும் மத்திய மாகாண மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்துக்கு இந்தத் தேர்தலின் ஊடாக பாரிய அங்கீகாரத்தை வழங்கவேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார்.
ஒருவேளை வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால் அதனை தனி ஈழம் ஒன்றை அமைக்க மக்கள் வழங்கிய ஆணையாக சர்வதேசத்துக்கு கூட்டமைப்பு எடுத்துக்கூறும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. எனவே கூட்டமைப்பு முன்வைத்துள்ள இனவாத மற்றும் பிரிவினைவாதத்தை நிராகரிப்பதற்கு ஆளும் கட்சியை வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் உயர்ந்த மட்டத்தில் வெற்றிபெறவைக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment