Monday, September 16, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முறைப்பாடு எதனையும் செய்யவில்லை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அண்மையில் வட மாகாணச
பைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த விஞ்ஞாபனம் நாட்டை பிளவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஆளும் கட்சி குற்றம் சுமத்தி வருகன்றமை குறிப்பிடத்தக்கது. எனினும், இது தொடர்பில் ஆளும் கட்சி இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வ முறைப்பாடுகளையும் செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு எதிராக ராவண பலய அமைப்பினால் மட்டும் ஓர் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் சட்டங்களை மீறாத வகையில் அனைத்து கட்சிகளும் சுயாதீனக் குழுக்களும் பிரச்சாத்தை முன்னெடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் கோரியுள்ளார்.

No comments:
Post a Comment