Monday, September 16, 2013
இலங்கை::கடும்போக்குவாதத்திற்கு எதிராக உலக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிராந்திய மற்றும் உலக அ
ளவில் கடும்போக்குவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தொடர்ந்தும் கடும்போக்குவாத சவால்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். கடும்போக்குவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் அது நாடுகளின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என கோதபாய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாதம், தீவிரவாதம், கடும்போக்குவாதம் ஆகியவற்றுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதனை சார்க் பிராந்திய வலய நாடுகள் கூட்டாக இணைந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment