Friday, September 06, 2013
இலங்கை::ராமேசுவரம் பகுதியில் இருந்து கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முன்னாள் மத்திய மந்திரியும் பாரதீய ஜனதா கட்சி தலைவர்களுள் ஒருவருமான சுப்பிரமணியசாமி நேற்று கொழும்பில் இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேசினார்.
அப்போது சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக அவர் ராஜபக்சேயுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல்.பெரீஸ், நிதி மந்திரி அமுனங்கமா ஆகியோர் உடன் இருந்தனர். சந்திப்புக்கு பின்னர் சுப்பிரமணியசாமி கூறுகையில்
‘அனைத்து மீனவர்களும் இலங்கை சட்டவிதிகளுக்குட்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என ராஜபக்சே தன்னிடம் உறுதி அளித்து உள்ளதாக’ தெரிவித்தார். இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகையில் ‘மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து விடுவோம்.
ஆனால் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை விடுவிக்கமாட்டோம். மீன்பிடி படகு அதிபர்கள் மீனவர்களை தவறாக வழிநடத்தி இலங்கை கடல்பகுதியில் மீன்பிடிக்க கட்டாயப்படுத்துகிறார்கள்’ என்றார்.

No comments:
Post a Comment