Saturday, September 7, 2013

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் புலிகளின் உயர்மட்டத் தளபதிகள் எவரும் படையினரிடம் சரணடையவில்லை: சரத் பொன்சேகா!

Saturday, September 07, 2013
இலங்கை::வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில்  புலிகளின் உயர்மட்டத் தளபதிகள் எவரும் படையினரிடம் சரணடையவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
 
சரணடைந்த புலிகளின் முக்கியஸ்த்தர்கள் மகிந்த ராஜபக்ஸ சகோதரர்களின் செல்லப்பிள்ளைகளாக உள்ளனர். தவிரவும் சரணடைந்த ஏனைய 12ஆயிரம் பேர்வரையிலான புலிபோராளிகள் புணர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகின்றனர் என யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
 
படையினரிடம் சரணடைந்தமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சரத் பொன்சேகா அப்படி எவருமே சரணடையவில்லை என மறுத்துள்ளார்...

இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்தோ ஒப்படைக்கப்பட்டோ காணாமல் போனவர்கள் என்று எவருமில்லை. இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த ஒப்படைக்கப்பட்ட 12,000 புலி உறுப்பினர்களும் புனர்வாழ்வுக்கு அனுப்பபட்டனர்.

இறுதி யுத்தத்தில் 23,000 புலிகள் கொல்லப்பட்டனர். அவற்றுக்குள் இந்த காணாமல் போனவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் உள்ளடங்கி இருக்கலாம். இறுதி யுத்த காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் 50 - 60 புலிகள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு இறுதி மரியாதை செய்து புலிகளால் எரிக்கப்பட்டதை நாம் ஆள் இல்லாத விமானம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பார்த்தோம்.

அச் சந்தர்பத்தில் உயிரிழந்த புலிகளின் குடும்பத்திற்கு புலிகளால் அறிவிக்கப்படாடாமல் இருந்திருக்கலாம் அவர்களையே தற்போது காணவில்லை என பெற்றோர்கள் தேடலாம்.

இராணுவத்திடம் பெற்றோர்களால் தமது பிள்ளைகள் கையளிக்கப்பட்டு இருந்தால் இராணுவத்தினரால் பதிவேடுக்கப்பட்டு இருக்கும்.

அந்த பெற்றோருக்கு அவர்கள் பிள்ளையை கையேற்றதற்கு ஆதாரமாக இராணுவத்தினரால் ஆவணங்கள் வழங்கப்பட்டு இருக்கும். அதனை ஆதாரமாக கொண்டு அந்த பெற்றோர்கள் போராட்டம் நடத்தலாம் என தெரிவித்தார். 

No comments:

Post a Comment