Saturday, September 07, 2013
ஸ்ரீநகர்::ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று மாலை சூபின் மேத்தா அமைதி கச்சேரி நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள இருக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் பிரிவினை வாத இயக்கத்தினர் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். மேலும் இதற்கு எதிரான கச்சேரிக்கும் சிலர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீநகர் அருகே உள்ள ஷோபியான் மாவட்ட காக்ரான் சி.ஆர்.பி.எப். முகாமை குறிவைத்து இன்று மதியம் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உடனே சுதாரித்துக்கொண்ட சி.ஆர்.பி.எப். ஜவான்கள் தீவிரவாதிகள் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும் அவர்கள் கொண்டுவந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் கையெறிக்குண்டுகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதில் ஜவான்களும் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து ஷோபியான் மாவட்டத்தின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராணுவத்தினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். ராணுவத்தினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலவரக்காரர்களை களைத்தனர்.
சட்டம் ஒழுங்கை பராமரிக்க போலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவம் நடந்த இடங்களுக்கு விரைந்துள்ளனர். ஸ்ரீநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment