Monday, September 23, 2013

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, பான் கீ மூன், கமலேஷ் சர்மா, ஆசிய, ஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளின் அரச தலைவர்கள் சிலருடனும் இருதரப்பு பேச்சுவார்த்தை!

Monday, September 23, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஆசிய, ஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளின் அரச தலைவர்கள் சிலருடனும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித்த கோஹன, பிரதி நிரந்தர பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதிகள் அலுவலகத்தின் பணியாளர்களும் வரவேற்றனர்.

2005ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நா பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகின்ற 6ஆவது சந்தர்ப்பம் இதுவாகும். முதலாவதாக 2006ஆம் ஆண்டு பேரவை அமர்வில் உரை நிகழ்த்தினார்.

ஜனாதிபதியின் இம்முறை விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இளைஞர் அலுவல்கள், திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment