Monday, September 23, 2013

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற நபர்களின் பெயர்கள் விருப்பு வாக்குகள் வெளியீடு!

Monday, September 23, 2013
இலங்கை::இம்முறை மாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை வடமேல் மாகாண சபைக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட தயாசிறி ஜயசேகர தனதாக்கிக் கொண்டுள்ளார்.
 
குருநாகல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட அவர், சாதனை மிகு 336,327 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
 
ஜொஹான் பெர்னாண்டோ, 134,423 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.
வடமேல் மாகாணத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் விருப்பு வாக்குப் பட்டியலில் மூன்றாமிடத்தில் டீ.பி. ஹேரத்தும், நான்காம் இடத்தில் ஜீ. தெஹிகமவும், ஐந்தாம் இடத்தில் வடமேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அதுல விஜேசிங்கவும் உள்ளனர்.
 
இதேவேளை, மத்திய மாகாண சபைக்குட்பட்ட கண்டி மாவட்டத்திலும் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
இந்த முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட அனுராத ஜயரத்ன, 107,644 விருப்பு வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
 
முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க 70,171 விருப்பு வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலுள்ளார்.
 
திலின பண்டார தென்னக்கோன் 45,047 விருப்பு வாக்குகளை பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக கண்டி மாவட்டத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
 
நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் விருப்பு வாக்குப் பட்டியலில் ஆர். முத்தையா அதிகூடிய வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.அவர் 50,600 விருப்பு வாக்குகளை சுவீகரித்துள்ளார்.
இந்த வரிசையில் 48,825 விருப்பு வாக்குகளுடன் ஆர்.கனகராஜ் இரண்டாம் இடத்திலுள்ளார்.
 
மாத்தளை மாவட்டத்தில் இதுவரை வெளியான விருப்பு வாக்குகளின் பிரகாரம், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் பிரமித்த பண்டார தென்னக்கோன் முன்னிலையில் உள்ளார்.அவர் 51,591 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
 
இதுதவிர பந்துல எஸ்.டி. யாலேகம 45,460 விருப்பு வாக்குகளுடனும், பராக்ரம திசாநாயக்க 24,686 விருப்பு வாக்குளுடனும், டபிள்யூ.எம். யசமான்ன 21,382 வாக்குகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
 
மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரஞ்சித் அலுவிஹாரே கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அவர் 29,545 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
 
வட மாகாண சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சீ.வி.விக்கேஸ்வரன் யாழ். மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
 
சீ.வி விக்னேஸ்வரன் 132,255 வாக்குகளுடன் முதலிடத்திலுள்ளார்.
கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகள் அனந்தி சசிதரனுக்கு கிடைத்துள்ளதுடன், அவர் 87 ஆயிரத்து 870 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
 
39,715 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் விருப்பு வாக்குகள் பட்டியலில் மூன்றாம் இடத்திலுள்ளார்.
 
இதேவேளை யாழ். மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட கந்தசாமி கமலேஸ்வரன் 13,632 வாக்குகளை பெற்றுள்ளார்.
 
அங்கஜன் இராமநாதன் 10,34 வாக்குகளை பெற்று, இரண்டாவது இடத்திலுள்ளார்.
 
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் விருப்பு வாக்குகளும் வெளியாகியுள்ளன.
 
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து வட மாகாண சபைக்காக நான்கு உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளதுடன், அதில் 3 ஆசனங்களை இலங்கை தமிழரசுக் கட்சி தனதாக்கிக்கொண்டுள்ளது.
 
தமிழரசுக் கட்சி சார்பாக தெரிவாகியவர்களின் பெயர்ப் பட்டியலில் அரியரத்னம் பசுபதி 27,264 வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
தம்பிராசா குருகுலராசா 26,427 விருப்பு வாக்குகளையும், சுப்ரமணியம் பசுபதிபிள்ளை 26,132 விருப்பு வாக்குகளையும் பெற்று மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ளனர்.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக வைத்தியநாதன் தவநாதன் 3,753 வாக்குகளைப் பெற்று மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ளார்.
 
மன்னார் மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட ஏ.எஸ். பீரிஸ் சிராய்வா 12,927 விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் காணப்படுகின்றார்.
 
பாலசுப்ரமணியம் டெனீஸ்வரன் 12,827 விருப்பு வாக்குகளையும், ஞானசீலன் குணசீலன் 12,260 விருப்பு வாக்குகளையும் பெற்று வட மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ளனர்.
 
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட அப்துல் ரிப்கான் பதியுதீன் 11,130 வாக்குகளைப் பெற்று அந்த கட்சியை பிரதிநிதித்துவபடுத்தி வட மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ளார்.
 
இந்த மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மொஹமட் ரயீஸ் 3,165 விருப்பு வாக்குகளுடன் மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ளார்.
 
இதன் பிரகாரம் வவுனியா மாவட்டத்தில் வெளியான விருப்பு வாக்குகளின் படி, இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட பத்மநாதன் சத்யலிங்கம் 19,656 விருப்பு வாக்குகளுடன் முன்னிலை வகிக்கின்றார்.
11,901 விருப்பு வாக்குகளைப் பெற்ற கந்தர் சமோதரன் பிள்ளை இரண்டாம் இடத்திலும், எம். தங்கராஜ் 11,681 விருப்பு வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்னர்.
 
வட மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நான்கு ஆசனங்களைக் கைப்பற்றியதுடன், கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட அன்டன் ஜெகநாதன் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
 
அன்டன் ஜெகநாதன் 9,309 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
9,296 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள சிவப்பிரகாசம் சிவமோகன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் விருப்பு வாக்குகள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
 
கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட துரைராசா ரவீகரன் மற்றும் கனகசுந்தர சுவாமி வீரபாகு ஆகியோர் அடுத்தப்படியாக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
 
துரைராசா ரவீகரன் 8,868 விருப்பு வாக்குகளையும், கனகசுந்தர சுவாமி வீரபாகு 8,702 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
 
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புச் சார்பில் போட்டியிட்ட மொஹமட் லெப்பை யசீன் ஜவஹர் அந்த கட்சியின் விருப்பு வாக்குப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
1,726 விரும்பு வாக்குகளை அவர் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment