Friday, September 06, 2013
இலங்கை::வட மாகாண சபை தேர்தல் முடிந்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்தமிழ் ஈழத்திற்கான மோதலை ஆரம்பிக்கும் அதன் வெளிப்பாடே அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்தது.
அரசாங்கம் இந்த ஆபத்தை கண்டுகொள்ளாது, ‘‘சீட்டாட்டம்’’ ஆடுகிறது என்றும் அந்த இயக்கம் தெரிவித்தது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொது செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்
அன்றைய வட்டுக்கோட்டை புலிகளின் தனி நாட்டு பிரகடனத்தை விட இன்று கூட்டமைப்பின் வட மாகாண சபை தேர்தல் விஞ்ஞாபனம் மாற்றம் அடைந்துள்ளது. ஒற்றை ஆட்சியை ஏற்றுக் கொள்வதாகவும் அதன் கீழ் தமக்கு தன்னாட்சி அதிகாரம் தேவை என்றும் வலியுறுத்தி உள்ளது.
இது மறைக்கப்பட்ட புலிகளின் தனி தமிழீழத்திற்கான நிகழ்ச்சி நிரலாகும். இதன் மூலம் சிங்கள மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.
கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமானது புதிய பிரிவினை வாதத்திற்கான பிரவேசம் ஆகும். ஒற்றையாட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரம் என்பதற்கு இடமே இல்லை.
வட மாகாண சபை தேர்தலுக்கு பின்னர் அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ளா வண்ணம் தடுப்பதற்கும் இதன் ஊடாக முயற்சிக்கப்படுகின்றது. ஏனென்றால் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தன்னாட்சி அதிகாரத்திற்கும் 13ஆவது திருத்தத்திற்குமே மக்கள் தமக்கு ஆணை வழங்கினர் என்று பிரசாரத்தை கூட்டமைப்பு சர்வதேச ரீதியில் முன்னெடுக்கும்.
அத்தோடு அதற்கான ஆதரவையும் கோரும். இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற் கும் கூட்டமைப்பிற்கும் இடையே அரசியல் அமைப்பு ரீதியான மோதல் ஆரம்பிக்கும் அது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானதாகும். ஆனால், அரச தரப்பில் சிலர் இதனை புரிந்து கொள்ளாது 13ஆவது துருப்பு சீட்டை எதிர்காலத்தில் முன்னெடுப்போம் என கூறுகின்றனர்.
இவர்கள் நாட்டின் பாதுகாப்போடு சீட்டாட்டம் நடத்துகின்றனர். நவநீதம்பிள்ளை இலங்கை வரும் போதும் அவர் எமக்கு சார்பாக கருத்துக்களை தெரிவிப்பார் என கூறினர். அவருக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர். ஆனால், இறுதியில் அவர் நாட்டுக்கு எதிரான கருத்துக்களை கூறி விட்டு வெளியேறி விட்டார்.
எனவே, நாடு எதிர்நோக்கும் ஆபத்து தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

No comments:
Post a Comment