Friday, September 6, 2013

கச்சத்தீவை இந்தியா திரும்ப பெற வேண்டும்: ஞானதேசிகன்!

Friday, September 06, 2013
சென்னை::கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறினார்.

சென்னை, சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் பணியை, ஞானதேசிகன், நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் உட்பட பலர், கலந்து கொண்

ஞானதேசிகன் அளித்த பேட்டி: தமிழக காங்கிரசில், புதிய உறுப்பினர் சேர்க்கை, புதுப்பிக்கும் பணி, இரண்டு மாதம் நடைபெறும். "சேது சமுத்திர திட்டம் ஏற்கனவே திட்டமிட்ட அதே பாதையில் நிறைவேற்றப்படும்' என, வாசன் கூறியுள்ளார். இத்திட்டம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இறுதி தீர்ப்பு வந்த பின், இத்திட்டத்தை, மத்திய அரசு உறுதியாக நிறைவேற்றும்.
டனர்.
 
கச்சத்தீவு பிரச்னையில், ஒரு முடிவு வர வேண்டும் என்றால், ஒப்பந்த அடிப்படையில், கச்சத்தீவை மத்திய அரசு பெற வேண்டும். இந்த பிரச்னை தொடர்பாக, நாங்கள் பிரதமரிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். இலங்கையில் நடைபெறவுள்ள, காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதா, பங்கேற்பதா என்பதை, இலங்கைத் தமிழர் நலனை முன் வைத்து, மத்திய அரசு முடிவு
எடுக்கும்.
 
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக, வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் பேசி உள்ளோம். டில்லி மற்றும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகங்களிலும் பேசி உள்ளோம். இலங்கை அரசுக்கு, தூதரகங்கள் பேக்ஸ் மூலம், தகவல் அனுப்பி இருப்பதாக தெரிவித்து உள்ளன. உணவு பாதுகாப்பு திட்டம் மூலம், தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் மானியம், எந்த வகையிலும் பாதிக்கப்படாது. இவ்வாறு, ஞானதேசிகன் கூறினார்.

No comments:

Post a Comment