Friday, September 6, 2013

நியூயார்க் நகரில் ஐ.நா. சபையில் 28-ந்தேதி மன்மோகன்சிங் பேசுகிறார் : ஒபாமா பேசுகிற அமர்வில் இலங்கை அதிபர் ராஜபக்சேயும் கலந்து கொண்டு பேசுகிறார்!

Friday, September 06, 2013
நியூயார்க்::நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுசபை கூட்டம் இந்த மாத இறுதியில் நடக்கிறது. இந்தக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிற தலைவர்களின் தற்காலிக பட்டியல் ஏற்கனவே வெளியானது. அதில் பிரதமர் மன்மோகன்சிங், வரும் 27-ந் தேதி பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த நாளில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்திக்க வசதியாக பிரதமர் மன்மோகன்சிங் 28-ந்தேதி ஐ.நா. பொதுசபையில் பேச இப்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை தொடர்ந்து, வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பிரதமர் மன்மோகன்சிங் 27-ந்தேதி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். அதில் இரு தரப்பு பொது உறவை வலுப்படுத்தும் அம்சங்கள், வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் இடம்பெறும்.

பேச்சு வார்த்தைக்குப் பின்னர் மன்மோகன்சிங்குக்கு ஒபாமா மதிய விருந்து அளிக்கிறார்.

அதைத் தொடர்ந்து அன்று மாலையே பிரதமர் மன்மோகன்சிங் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்காக வாஷிங்டனில் இருந்து நியூயார்க் புறப்பட்டுச்செல்கிறார்.

பிரதமர் மன்மோகன்சிங்கும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் வெள்ளை மாளிகையில் பேச்சு நடத்துகிறபோது, ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசுகிறார். ஒபாமா, ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரேசில் அதிபரை தொடர்ந்து 2-வது நபராக பேசுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒபாமா பேசுகிற அமர்வில் இலங்கை அதிபர் ராஜபக்சேயும் கலந்து கொண்டு பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment