Friday, September 6, 2013

தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு உங்களை ஏமாற்றி தங்கள் வாழ்க்கையை வளமாக்குகிறார்கள்.அவர்கள் இன்றும் என்றும் எதையும் இழந்ததுமில்ல இழக்கத்தயாராகவுமில்லை: திருமதி ஞானசக்தி ஸ்ரீதரன்!

Friday, September 06, 2013
இலங்கை::தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு உங்களை ஏமாற்றி தங்கள் வாழ்க்கையை வளமாக்குகிறார்கள்.அவர்கள் இன்றும் என்றும் எதையும் இழந்ததுமில்ல இழக்கத்தயாராகவுமில்லை: திருமதி ஞானசக்தி ஸ்ரீதரன்!
 
இடம் ஆவரங்கால் சிவன் கோவிலடி இந்துஇளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நிகழ்ந்த கூட்டம்:
 ஐங்கரன் தலைமையில் 31-08-2013 இல் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்hபில் போட்டியிடும் ஈழமக்கள்ஜனநாயக கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரும் முதன்மை வேட்பாளருமான திரு தவராசா, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளருமான திரு கமலேந்திரன் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகரவிடுதலைமுன்னணியைச் சேர்ந்த திருமதி ஞானசக்தி ஸ்ரீதரன் ஆகியோர் மற்றும் உள்ள+ர் பெரியோர்கள்  விளையாட்டுவீரர்கள்பங்கு பற்றி உரையாற்றினார்கள்
 
300 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கெர்ணடனர்
இத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஞானசக்தி அவர்களின் உரை பின்வருமாலறு இருந்தது.
 
இக்கிராமத்தை பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது. இத்தனை துன்பங்கள் மத்தியிலும் இவ்வளவு பேர் கூடியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது.அதுவும் பெருமளவு பெண்கள் கூடியிருக்கிறார்கள் .
அடிப்படைத் தேவைகள் அதிகம். அதைச்செய்து தருவதற்குரியவர்கள் யாரும் உங்களை நோக்கி வருவதில்லை.
 
கடந்த காலங்களில் மக்களை உணர்ச்சியூட்டி நடைமுறைக்கு சாத்தியமில்லாததைக் கூறி அடிப்படைப்பிரச்சனைகளை உணர -அறிவு ரீதியாக சிந்திக்க முடியாதவர்கள் ஆக்கி- மன அழுத்தநிலைக்கு தள்ளப்பட்டு தமது சொந்த நலன்களுக்காக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று வருபவர்கள் யாராவது உள்ளு+ரில் உங்கள் இன்பதுன்பங்களில் நின்றிருக்கிறார்களா?
 
அவர்கள் வெற்றுக் கோசங்களை முழங்கி வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயற்பட்டு வருபவர்கள் .
இழப்பதற்கு எதுவுமில்லாத உங்களிடம் தமது சாதுரியமான பேச்சுக்களாலும் ,தந்திரமான செயற்பாடுகளாலும் தங்களை நிலை நிறுத்த உங்கள் உழைப்புக்கள் அனைத்தையும் மூலதனம் ஆக்குகிறார்கள் . கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புக்கள் போராளிகள் மக்களின் இழப்புக்கள்  அகதிவாழ்க்கைக்கும் உடந்தையாகச் செயற்பட்டவர்கள் .
நீங்கள் அறிவு சார்ந்து உங்கள் வாழ்நிலையை மேம்படுத்த சிந்தித்துரு செயற்பட வேண்டும்
 
நீங்கள் விழிப்புடன் செயற்படாதவரை தொடர்ச்சியாக உங்களை ஏமாற்றி தங்கள் வாழ்க்கையை வளமாக்குகிறார்கள்.அவர்கள் இன்றும் என்றும் எதையும் இழந்ததுமில்லை இழக்கத்தயாராகவுமில்லை.
எதிர் காலத்திலாவது எமது மக்களுடைய வாழ்க்கை அமைதியாகவும் நிம்மதியாகவும் சுபிட்சமாகவும் அமைவதற்கு நீங்கள் தான் முன்வரவேண்டும்
 
55 சத வீதத்திற்கு மேற்பட்ட பெண்களின் வாக்குரிமை சரியான ஒரு தெரிவாகவும் பெண்களின வாழ்நிலையில் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் அமைய வேண்டும்.
அது உங்களால் நிச்சயம் முடியும் .நீங்கள் விழித்திருந்தால் சமூகத்தில
சிறந்ததொருமாற்றத்தை ஏற்படுத்த முடியும்
எனவே விழிப்புடனும் பொறுப்புடனும் செயற்பட முன் வரவேண்டும். எமது மக்களுக்கு நல்லதோர் எதிர் காலம் செய்வோம!;
 

No comments:

Post a Comment