Friday, September 06, 2013
இலங்கை::ஒருவர் சிவி. விக்னேஸ்வரன் கூறுகின்றார், 'மூன்றாம் கட்டப்போர் ஆரம்பம் ' என்று. இன்னொருவர் அதுதான் விக்னேஸ்வரனால் வாழ்வு கிடைக்கப்பெற்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகின்றார். 'எம்மிடம் ஆயுதம் இருந்திருந்தால் சமஷ்டிக்கு அப்பால் சென்றிருக்கலாம் ' என்று.
வடக்கு வாக்காளர் பெருமக்களே இரண்டு போர் வீரர்களிடமும் எங்கையாவது இன்றுவரை மறைத்து புதைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் இருந்தால் அந்த புதைகுழிகளை தயவு செய்து இவர்களிடம் காட்டுங்கள். நாளை நிச்சயம் தமிழ் ஈழம் கிடைக்கச் செய்வார்கள். அதன் பின்பு சீமானுக்கு மட்டும் தெரிந்த இடத்தில் ஒளித்திருக்கும் பிரபாகரனை கொண்டு வந்து இவர்கள் முடிசூட்ட வசதியாக இருக்கும். பிறகென்ன பிரபாகரன் 'என்னைக் கொலை செய்ய இருந்தார்' என்று அறிக்கை விட்ட சம்மந்தர் குளோஸ். பிறகு முடி சூடப்போவது சுரேஸ் பிரேமச்சந்திரனோ அல்லது விக்னேஸ்வரனோ தானே. விக்னேஸ்வரன் தனது வாரிசுகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்க அவர்களின் வாழ்கைத் துணைகள் அனுமதிக்க போவதில்லை. அப்ப அடிக்கப் போகுது குருசந்திரயோகம்
சுரேஷ் பிரேமசந்திரனிற்குத்தான். ஏற்கனவே இதற்காக தனது தம்பியையும், நண்பனையும் களத்தில் இறக்கி சிவசக்தி ஆனந்தனிடம் வயித்தெரிச்சலை வாங்கிக் கட்டிய சுரேஸ் இற்கு எல்லாம் சுபம்தான். என்ன அப்புலிமாமாவில் வரும் விக்கிராமித்தன் கதைபோல் இருக்கின்றதா. பின்ன என்ன சொல்ல வட மாகாண சபைத் தேர்தல் வெடிகளில் இந்த இரண்டு வெடிகளுமே தற்போது பெரிய மத்தாப்பு வெடிகள். 1ம் கட்டப்போர், 2ம் கட்டப்போர் என் நான் அறிய 4ம் கட்டப்போர் என பிரபாகரன் அறிவித்தல்கள் விட்டு தன்னால் பிடிக்கப்பட்ட சிறார்களை யுத்தத்தின் முன்னணியல் அனுப்பி பலியிட்ட போதெல்லாம் கொழும்பு 7 இல்; கூதல் காய்ந்த விக்னேஸ்வரன் இன்று 3ம் கட்டப் போர்ப் பிரகடனம் செய்கின்றார்.
இதே வேளை இதே கொழும்பு 7 இலும், இந்தியாவிலும் இடைக்கிடை தமிழ் செல்வன் முன்னிலையில் கைகட்டியும் நின்ற சுரேஸ் ஆயுதம் இருந்திருந்தால் என்றும் சவால் விட்டால் வேறு என்னத்தை நாம் சொல்ல முடியும். சுரேஷ் ஆயுத அறிக்கையை வாசிக்கும் போது எனக்கு ஞாபகம் வருவது 'கூரை ஏறி கோழி பிடிக்க மாட்டாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்' என்ற பழமொழிதான் ஞாபகம் வருகின்றது. இவரின் கைகளில் ஆயுதம் இருந்தபோது பிரபாகரனை குறிபார்த்த ஆயுதம் பின்பு இவரின் தலவரை பலிகொடுத்தவிட்டு தான் அந்தப் பதவியை எடுத்ததும் தனது தோழர்களை மட்டுமே குறிபார்த்தது.
அப்போ எப்படி ஐயா சமஷ்டி கிடைத்திருக்கும். சரேஷ் இன் குறி பொது எதிரியை விடுத்து சகோதர யுத்தத்தை அல்லவா ஏற்படுத்தியிருந்தது. இதற்கு சாட்சிகள் பல இருந்தாலும் சுபத்திரனின் மரணம் சாட்சியங்களுடன் இன்றும் பறைசாற்றி நிற்கும் விடயம் அல்லவா. மனச்சாட்சி என்று இருந்தால் செய்த பாவங்களுக்காக உன் சகபாடி குணசேகரனையும் கூட்டிக்கொண்டு அவர்பாணியில் (கள்ளச்)சாமியாராக மாறி மக்களைவிட்டு ஒதுங்கி நிற்பதே நலம். அன்றேல் கிட்லருக்கான தண்டனையை மக்கள் மன்றங்கள் இன்று வழங்கி நிற்பதுபோல் வரலாறு என்றோ ஒரு நாள் உங்களைத் தண்டித்தே நிற்கும். வரலாறு எப்போதும் பின்னோக்கி நகருவதில்லை எப்பவோ எங்கேயோ ஒரு புத்தகத்தில் வாசித்த ஞாபகம் இருக்குமே.....?

No comments:
Post a Comment