Friday, September 06, 2013
சென்னை::பார்லிமென்டில் (புலிகள் ஆதரவு) தமிழக எம்.பி.,க்கள் ஆவேசம்: கச்சத்தீவு மனுவை வாபஸ் பெற
வலியுறுத்தல்!
கச்சத்தீவு தொடர்பாக, இலங்கைக்கு சாதகமாக, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த
மனுவை, மத்திய அரசு உ
டனே வாபஸ் பெற வேண்டும். அதற்கு பதிலாக, புதிய மனுவை தாக்கல்
செய்ய முன்வர வேண்டும்' என, பார்லிமென்டில், (புலிகள் ஆதரவு) தமிழக எம்.பி.,க்கள், நேற்று கோரிக்கை
விடுத்தனர்.
சுப்ரீம் கோர்ட்டில் மனு:
இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை, திரும்பப் பெறும்படி, மத்திய
அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, முதல்வர் ஜெயலலிதா சார்பில், சுப்ரீம்
கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு, சமீபத்தில், பதில் மனு
தாக்கல் செய்த, மத்திய அரசு, "கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்படவில்லை.
அதனால், அதை திரும்பப் பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை; கச்சத்தீவு இலங்கைக்கு
சொந்தமானது' என, தெரிவித்திருந்தது. மத்திய அரசின் இந்தப் பதில், தமிழக அரசியல்
கட்சிகள் மத்தியில், கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்னையை, நேற்று
லோக்சபாவில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள் எழுப்பினர்.
"கச்சத்தீவு விவகாரத்தில், மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது' எனக் கூறி,
கடுமையான வாதங்களை முன்வைத்தனர்.
லோக்சபாவில், பூஜ்ஜிய நேரத்தின் போது, இந்த விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க.,
பார்லிமென்ட் கட்சித் தலைவர், தம்பிதுரை பேசியதாவது: கச்சத்தீவு இந்தியாவுக்கு
சொந்தமானது. உண்மை இவ்வாறு இருக்க, அந்தத் தீவு, இலங்கைக்கு சொந்தமானது என, மத்திய
அரசு திரும்ப திரும்ப கூறி வருகிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்துடன்,
தொடர்புடைய கச்சத்தீவை, மீட்டே ஆக வேண்டும். இதற்காகவே, 2009ல், அ.தி.மு.க.,
சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஆவணங்கள்:
கச்சத்தீவு தொடர்பான, பழமையான ஆவணங்கள் எல்லாம், அந்தத் தீவு தமிழகத்துக்கு
சொந்தமானது, குறிப்பாக, ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது என்பதை
உறுதிப்படுத்துகின்றன. அப்போதைய இலங்கை அமைச்சர் ஒருவர் கூட, "கச்சத்தீவு
இந்தியாவுக்கு சொந்தமானது' என, கூறியிருக்கிறார். கடந்த, 1974ல், தமிழகத்தின்
ஒப்புதல் இல்லாமல், கச்சத்தீவை, அப்போதைய பிரதமர் இந்திரா, இலங்கைக்கு தாரை
வார்த்தார்; இதற்கு, பார்லிமென்டின் ஒப்புதல் பெறவில்லை. அவ்வாறு, தாரை
வார்க்கப்பட்ட ஒப்பந்தத்திலும், தமிழக மீனவர்களுக்கு, மீன்பிடி உரிமை
வழங்கப்பட்டிருந்தது. இப்போது, அதுவும் பறிபோய் உள்ளது. இந்த சூழ்நிலையில்,
"கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது' என, மத்திய அரசு மனுதாக்கல் செய்திருப்பது,
துரதிருஷ்டமானது; இதை ஒரு போதும் ஏற்க முடியாது. மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை,
உடனடியாக வாபஸ் பெற வேண்டும். கச்கத்தீவு, நம் நாட்டின் ஒருங்கிணைந்த அங்கம்
என்பதை, உறுதி செய்யும் வகையில், நம்நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில்,
புதிய மனுவை, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு,
தம்பித்துரை பேசினார். இதே பிரச்னை தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலுவும்
பேசினார். அவரும், "சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, மத்திய
அரசு வாபஸ் பெற வேண்டும்' என, வலியுறுத்தினார்.
நீக்க வேண்டும்:
அவர் மேலும் பேசியதாவது: இலங்கையில் நடைபெறும், காமன்வெல்த் மாநாட்டில்,
இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க, மத்திய
அரசு முன்வர வேண்டும். தவிர, காமன்வெல்த் அமைப்பிலிருந்தும், இலங்கையை, "சஸ்பெண்ட்'
செய்ய வேண்டும். கடந்த, 1995ல், நைஜீரியா நாடு நீக்கப்பட்டது. 2007ல், முஷாரப்பின்
சர்வாதிகார ஆட்சியை காரணம் காட்டி, பாகிஸ்தானும் நீக்கி வைக்கப்பட்டது. ஜிம்பாப்வே,
பிஜி போன்ற நாடுகளும், இதற்கு முன், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான தமிழர்களை
கொன்று குவித்த காரணத்திற்காக, காமன்வெல்த் அமைப்பில் இருந்து, இலங்கையை நீக்கலாம்.
இவ்விஷயத்தில், மத்திய அரசு, விரைந்து செயலாற்ற வேண்டும். காமன்வெல்த் விளையாட்டுப்
போட்டிகளில், இந்தியா கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதோடு மட்டுமின்றி, இலங்கையை
காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்குவதற்கும், நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வர
வேண்டும். இவ்வாறு, டி.ஆர்.பாலு, பேசினார்.

No comments:
Post a Comment