Saturday, September 28, 2013
இலங்கை::இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எட்டு பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொது முயற்சியான்மைக்கான நிலையியற்குழு மேற்கொண்ட உத்தரவிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக கணக்காய்வாளர் நாயகம் எச்.ஏ.எஸ்.சமரவீர கூறியுள்ளார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மசகு எண்ணெய் கொள்வனவின்போது பின்பற்றும் நடவடிக்கை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த 2012 ஆம் ஆண்டு கோப் குழு அறிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அறிக்கை ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், இதன் பிரகாரம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எட்டு பில்லியனுக்கும் மேற்பட்ட நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
செயற்றிரன் இன்மை மற்றும் அதிக விலைகொடுத்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டமை உள்ளிட்ட விடயங்களால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளமையும் கணக்காய்வுகளின்போது கண்டறியப்பட்டுள்ளது
நிறுவனங்களை தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இணைக்கும்போதும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உரிய நடைமுறையை பின்பற்றத் தவறியுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment