Saturday, September 28, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகள் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கை குறித்து பேசப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுநலவாய நாடுகள் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு நேற்றைய தினம் நியூயோர்க்கில் ஆரம்பமானது. இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், பிஜீ தீவுகள் குறித்தே வெளிவிவகார அமைச்சர் மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளது. மாலைதீவு விவகாரம் குறித்தும் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளனர்.

No comments:
Post a Comment