Saturday, September 28, 2013

வட மாகாண சபைக்குரிய கட்டடத்தை யாழ். கைதடி பகுதியில் ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை!

Saturday, September 28, 2013
இலங்கை::வட மாகாண சபைக்குரிய கட்டடத்தை யாழ். கைதடி பகுதியில் ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
வட மாகா
ண சபைக்கான கட்டட நிர்மாணப் பணிகள் தற்போது பூர்த்தியடையும் தருவாயில் இருப்பதுடன், ஒக்டோபர் 10 ஆம் திகதியளவில் முழுமையாக கட்டடத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட மாகாண பிரதம செயலாளர் விஜயலக்ஷ்மி ரமேஷ்  தெரிவித்துள்ளார்
 
மாகாண சபை அமர்வுகள் நடத்தப்படும் திகதி, விபரங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் வட மாகாண சபை இயங்குவதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
ஏற்கனவே நிர்மாணப் பணிகள் முன்​னெடுக்கப்பட்டு வந்த நிலையில், வட மாகாண சபைக்கான தேர்தலின்மூலம் ஆட்சி நிருவாகம் உருவாகியுள்ளதை அடுத்து அந்த பணிகள் துரிதப்பட்டுள்ளதாகவும் பிரதம செயலாளர் விஜயலக்ஷ்மி ரமேஷ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்
 
 

No comments:

Post a Comment