Wednesday, September 18, 2013
இலங்கை::இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி கோபாலசாமி தலைமையிலான பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் நேற்று யாழ் வட மாகாண தேர்தல் நிலைமைகள் குறித்து உரிய தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் ஈடுபடவுள்ளனர். இவர்கள் வடக்கு தேர்தல் நிலைமைகளை கண்காணிக்கவுள்ளனர். இதன் முதற்கட்டமாக நேற்று யாழ்ப்பாணம் வந்த இவர்கள் யாழ். செயலகத்தில் யாழ். தேர்தல் நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆராய்ந்தனர்.
நேற்றிரவு யாழ். உதவித் தேர்தல்கள் ஆணையாளர், தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் தேர்தல் திணைக்கள் அதிகாரிகளை கண்காணிப்பாளர்கள் சந்தித்துப் பேசினர். இன்று வடக்கில் பல்வேறு இடங்களுக்கும் செல்லும் இவர்கள் பல தரப்பினரையும் சந்தித்து தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment