Wednesday, September 18, 2013

(புலிகளின்) தமிழ் தேசியத்தை மட்டக்களப்பு மக்கள் ஒருபோதும் காட்டிக் கொடுத்ததில்லை: தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் (புலி பிணாமி)சீனித்தம்பி யோகேஸ்வரன்!

Wednesday, September 18, 2013
இலங்கை::(புலிகளின்) தமிழ் தேசியத்தை மட்டக்களப்பு மக்கள் ஒருபோதும் காட்டிக் கொடுத்ததில்லை:  தமிழ் தே
சிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் (புலி பிணாமி)சீனித்தம்பி யோகேஸ்வரன்!
 
(புலிகளின்) தமிழ் தேசியத்தை மட்டக்களப்பு மக்கள் ஒருபோதும் காட்டிக் கொடுத்ததில்லை அவர்கள் இப்போதும் தமிழ் தேசிய உணர்வுடனேயே செயல்படுகின்றனர் என தமிழ் தேசிய (புலி) கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
 
வடக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற தமிழ் தேசிய (புலி) கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
நானும் மட்டக்களப்பு மண்ணில் தான் பிறந்தவன். வடக்கு மக்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம் தமிழ் தேசியத்தைக் காட்டிக் கொடுத்தது மட்டக்களப்பு மக்கள் தான் என்று ஆனால் அது தவறு என அவர்களுக்கு நான் தெளிவுபடுத்தவே இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். மட்டக்களப்பில் பிறந்த ஒரு தனி நபர் செய்த செயலுக்காக மட்டக்களப்பு மக்கள் அனைவரையும் துரோகிகள் என்று எண்ணும் கருத்தை நிறுத்த வேண்டும்.
எம்மக்கள் எந்தளவு (புலிகளின்) தமிழ் தேசிய உணர்வுடன் இருக்கின்றனர் என்பதனை கடந்த வருடம் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மற்றும் 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.
 
எம்மக்கள் என்றும் (புலிகளின்) தமிழ் தேசிய உணர்வுடனும், தமிழ் தேசிய (புலி) கூட்டமைப்புடனும் தான் இருக்கின்றனர் என்பதனை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய (புலி) கூட்டமைப்பு சார்பில் 11 ஆசனங்களைக் கொடுத்து எமது தமிழ் தேசிய கூட்டமைப்பினை வெற்றி பெறச் செய்து காட்டியிருக்கின்றனர். கிழக்கில் 12 உறுப்பினர்கள் தமிழர்கள் தெரிவானார்கள். இதில் 11 பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேரந்தவர்கள்.
 
ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் சதிச் செயல் காரணமாக எம்மால் கிழக்கில் ஆட்சியமைக்க முடியாமல் போய்விட்டது. தற்போது இந்த அரசாங்கம் ஒரு இக்கட்டான சூழலில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்வந்து தற்போது திண்டாடிக் கொண்டிருக்கின்றது. அவர்களுக்குத் தெரியும் வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் வெற்றி பெறும், ஆட்சியமைக்கும் என்று.
ஆனால் எமது இலக்கு இந்த வடமாகாண சபைத் தேர்தல் அல்ல, தந்தை செல்வாவோ,  புலிகளின் தலைவர் பிரபாகரனோ இந்த மாகாண சபை முறைமைக்காக போராடவில்லை. மஹிந்த சிந்தனையைப் போன்று எம்மிடமும் அரியன் சிந்தனை என்று ஒன்று இருக்கின்றது.
 
அதாவது எமது போராட்டத்தினை ஐந்து கட்டங்களாக வகுத்திருக்கின்றோம். அகிம்சை போராட்டமும் முடிவுற்றது அடுத்து புலிகளின் ஆயுதப் போராட்டமும் மௌனித்து விட்டது. இன்று இராஜதந்திரப் போரில் ஈடுபடுகின்றோம் இதன் மூலம் எமக்கு கிடைக்கும் இதனை நாம் உலகிற்கு தெரியப்படுத்துவோம் என்பதே அச் சிந்தனையாகும்.
 
மன்னார் வாழ் மக்களே எமது கிழக்கு மக்கள் (புலிகளின்) தமிழ் தேசியத்துடன் இருக்கின்றனர் என்பதனை நிரூபித்து விட்டார்கள். தற்போது உங்களுக்கும் அத்தருணம் கிடைத்துள்ளது எனவே (புலிகளின்) தமிழரின் வாழ்வு மலரவும் தமிழர் என்றும் (புலிகளின்) தமிழ் தேசியத்துடன் தான் இருக்கின்றனர் என்பதனை இந்த அரசுக்கு காட்டவும் எம் தமிழரின் கட்சியான தமிழ் தேசிய (புலி) கூட்டமைப்பிற்கு வாக்களித்து பெரும்பான்மையுடன் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றார்.(புலி பிணாமி) யோகேஸ்வரன்!

No comments:

Post a Comment