Wednesday, September 18, 2013
இலங்கை::யாழ். தென்மராட்சி பகுதியில் பிரிவினைவாத தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவமானது
மதியம் சுமார் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தின் போது பிரிவினைவாத பிரச்சாரப் பணியில் இருந்து இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிக்சைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதோடு இத்தாக்குதலானது 596657 என்னும் ஹயஸ் வாகனத்தில் வந்தவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment