Monday, September 16, 2013

கச்சத்தீவில் உரிமையை நிலைநாட்ட வேண்டும்: ஜி.கே.வாசன்!

Monday, September 16, 2013
திருப்புவனம்::கச்சத்தீவில் நமது பாரம்பரிய உரிமையை நிலைநாட்ட வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தப்படி 40 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
 
தமிழக மக்களின் உரிமையை இலங்கை அரசு மறுக்க முடியாது. மக்களின் உணர்வுகளை அரசிடம் எடுத்து கூறுவது மத்திய அமைச்சர்களின் கடமை. அதை படிப்படியாக மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.
 
இதன்படி, இலங்கைக்கு எதிராக ஐநா சபையில் வாக்களித்தது. இலங்கையில் சிங்கள மக்களுக்கு கிடைக்கும் அதே உரிமையை தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும். மீனவர்கள் பிரச்னையில் முழுமையான தீர்வு காண வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்துவேன் என்றார்.

சிவகங்கை மாவட் டம், திருப்புவனத்திற்கு திருமண விழாவில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் வாசன் அளித்த பேட்டி:

No comments:

Post a Comment