Monday, September 16, 2013

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது!

Monday, September 16, 2013
இலங்கை::முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனு இன்றைய தினம்  கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இந்தப் போது ஷிரானி பண்டாரநாயக்க தனது கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
 
ஏதேனும் அவசர தேவைக்காக வெளிநாடு செல்ல நேரிட்டால் நீதிமன்றின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமேன கொழும்பு மாவட்ட நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
 
முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க கால அவகாசம் தேவைப்படுவதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி டிலான் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
 
சொத்து விபரங்கள் தொடர்பான தகவல்களை மறைத்ததாக ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியங்களை திரட்ட கால நேரம் தேவைப்படுவதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
 
வழக்கு விசாரணைகளில் ஷிரானி பண்டாரநாயக்க நேரடியாக ஆஜராகியிருந்தார்.

No comments:

Post a Comment