Monday, September 16, 2013

விக்னேஸ்வரன் நீதியரசர் பதவியை விட்டு விலகிய பின்னர் புலித்தோலை போர்த்தி அரசியல் வாழ்க்கையை தொடங்கியுள்ளார்: இந்து பீடத்தின் செயலாளர் பிரம்மஸ்ரீ ஆர். பாபு சர்மா!

Monday, September 16, 2013
இலங்கை::விக்னேஸ்வரன்  நீதியரசர் பதவியை விட்டு விலகிய பின்னர் புலித்தோலை போர்த்தி அரசியல் வாழ்க்கையை தொடங்கியுள்ளார்: இந்து பீடத்தின் செயலாளர் பிரம்மஸ்ரீ ஆர். பாபு சர்மா.
 
தென் இந்திய அரசியல் வாதிகள் தங்களது அரசியல் பிழைப்புக்காகவே இலங்கைத் தமிழர் விடயங்களை கையாள் வதாக சென்னை ஆங்கிலப் பத்திரிகைக்கு முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன் முன்னர் அறிக்கைவிட்டிரு ந்தார்.
 
ஆனால் இப்போது நான் அதுமட்டும் கூறவில்லை. இன்னும் பலதை கூறியிருந்தேன். அவை திரிபுபடுத்தப் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளமை விக்னேஸ்வரனின் அரசியல் முதிர்ச்சியின் மையை காட்டுவதாக சர்வதேச இந்து பீடத்தின் செயலாளர் பிரம்மஸ்ரீ ஆர். பாபு சர்மா தெரிவித்துள்ளார்.
 
தான் பதவியில் இருந்த போது புலிகளை விமர்சிக்காமல் புலிகளும் மனித உரிமை மீறலை செய்தவர்கள், புலம்பெயர் தமிழர்கள்  புலிகளை மேன்மையாக கருதும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
 
ஆனால் இன்று நீதியரசர் பதவியை விட்டு விலகிய பின்னர் புலித்தோலை போர்த்தி அரசியல் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இதனை தான் தமிழக அரசியல்வாதிகளும் செய்கிறார்கள் என்பதனை விக்னேஸ்வரன் உணர வே
ண்டும் என பாபு சர்மா தெரிவித்தார்.

No comments:

Post a Comment