Monday, September 16, 2013
இலங்கை::இலங்கைக்கு மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் நான்கு இந்திய மருந்து நிறுவனங்களை தடை செய்வதற்கு சுகாதார அமைச்சு இன்று தீர்மானித்துள்ளது.
இலங்கை::இலங்கைக்கு மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் நான்கு இந்திய மருந்து நிறுவனங்களை தடை செய்வதற்கு சுகாதார அமைச்சு இன்று தீர்மானித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வாசனை திரவியங்கள் மற்றும் ஔடதங்கள் அதிகார சபையின் பணிப்பாளருக்கு, சுகாதார அமைச்சர் மைத்திறிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நான்கு நிறுவனங்களினால் இந்த வருடம் மாத்திரம் தரம் குறைந்த 122 வகையான மருந்துப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வருடங்களாக இந்த நிறுவனங்கள் தரமற்ற மருந்துப்பொருட்களை நாட்டிற்கு விநியோகித்துள்ளதுடன், ஒவ்வொரு வருடமும் குறித்த நிறுவனங்களுக்கு இது தொடர்பில் அறிவித்த போதிலும், அதனை அவர்கள் பொருட்படுத்தவில்லை எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தரமற்ற மருந்து வகைகளை விநியோகித்த குறித்த நிறுவனங்களிடம் இருந்து பணத்தை மீளப்பெறவும், அவர்களின் உள்நாட்டு பிரதிநிதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

No comments:
Post a Comment