Thursday, September 26, 2013

பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நியூயோர்க்கில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது!

Thursday, September 26, 2013
இலங்கை::பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நியூயோர்க்கில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நியூயோர்க் நேரப்படி  இச்சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய நாடுகளின் 2013ஆம் ஆண்டு தலைவர்களுடைய கூட்டம், கருத்தாடலில் முக்கிய விடயமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

தலைவர்களுடைய சந்திப்பும் நாம் அடைய எதிர்பார்க்கின்ற பெறுபேறுகள் தொடர்பாக பெரிதும் ஆக்கபூர்வமான மனோபாவங்களை காண முடியும் என்று சர்மா தெரிவித்தார்.

நீங்கள் தெரிவு செய்துள்ள பங்கேற்பு, நீதி, நியாயம் ஆகிய நோக்கங்களை உள்ளடக்கிய தொனிப்பொருள் எல்லா இடங்களிலும் வரவேற்கப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

இம்முறை பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தின் தொனிப்பொருள் ´வளர்ச்சியுடன் நீதி: பங்கேற்பு அபிவிருத்தி´ என்பதாகும். மக்கள் தொகையின் அனைத்து பிரிவிற்கும் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் அபிவிருத்தியின் பயன்கள் கிட்ட வேண்டும் என்ற ஜனாதிபதி ராஜபக்ஷவின் நோக்கின் வழியாக இத்தொனிப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

நாம் புலப்படக்கூடிய பெறுபெறுகளை பெற்றுக்கொள்ள வேண்டும், இன்றேல் இது இன்னுமொரு கூட்டமாக மாத்திரமே அமையும், என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மகாநாட்டின் தயார் நிலையை பரிசீலிக்கும் பொருட்டு கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கு வருகைதந்த பல நாடுகளின் பிரதிநிதிகள் மகாநாட்டுக்காக மேற்கொள்ளப்படுகின்ற ஏற்பாடுகளை பாராட்டியுள்ளனர் என சர்மா ஜனாதிபதிக்கு தெரிவித்தார்.

பூர்வாங்க விசாரணை சுற்றுலாவில் ஈடுபட முடியாத நாடுகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை இயலுமான அனைத்தையும் செய்துள்ளது என சர்மா கூறினார்.

பொதுநலவாய செயலாளர் நாயகத்தின் பணிப்பாளர் சைமன் கிம்சன் அரசியல் நடவடிக்கைகளின் பணிப்பாளர் அமித்தாவு பெனர்ஜி தொடர்பாடல் மற்றும் பொது மக்கள் தொடர்பு பணிப்பாளர் ரிச்சட் உக்கு ஆகியோரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான ஆசிய அலகின் தலைவர் நிஷ்னா ஜயவிக்ரமவும் ஜனாதிபதியை சந்தித்த பொதுநலவாய தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருடன் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஷெனுக்கா செனவிரத்ன மற்றும் ஐரோப்பிய, அமெரிக்க அலகின் பணிப்பாளர் நாயகம் ஹிமாலி சேரசிங்க ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment