Friday, September 27, 2013
இலங்கை::ஓய்வுபெற்ற படை வீரர்களின் சங்கத்துக்கான யாழ் கிளையின் அங்குரார்ப்ப வைபமொன்று அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள சிவில் விவகார மற்றும் பொதுமக்கள் உறவுக்கான காரியாலயத் தொகுதியில் இடம்பெற்றது.
யாழ் படைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் அழைப்பின் பேரில் சமூகமளித்திருந்த ஓய்வுபெற்ற படைவீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் பசுமையான கடந்தகாலத்தை நினைவு கூரக்குடியக்கூடியதாக இருந்ததுடன் மேற்படி சங்கம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது, சமூகமளித்தருந்தவர்களுக்கு தமது பழைய நன்பர்களைச் சந்திக்கூடிய வாய்ப்பாகவும் அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் அவர்களுக்கும் அவர்களுடன் சமூகமளித்திருந்த பேரப்பிள்ளைகளுக்கும் பெறுமதியான அன்பளிப்புப் பொதிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிரேஸ்ட அரச அதிகாரிகள், ஓய்வுபெற்ற படைவீரர்கள் சங்க அதிகாரிகள், சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.


No comments:
Post a Comment