Thursday, September 26, 2013

வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டமை காரணமாக புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்த இன சுத்திகரிப்புக்கு சட்டரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் சம்பிக்க ரணவக்க!

Thursday, September 26, 2013
இலங்கை::வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டமை காரணமாக  புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்த இன சுத்திகரிப்புக்கு சட்டரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் சம்பிக்க ரணவக்க!
 
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அரசாங்கம் அரசியல் ரீதியான தவறை செய்துள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
 
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டமை காரணமாக  புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்த இன சுத்திகரிப்புக்கு சட்டரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
வடக்கில், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை குடியேற்றாமல் இன சமநிலையற்ற நிலையில் தேர்தல் நடத்தப்பட்டது தவறானது. அத்துடன் இது தமிழ் சுயாட்சிக்கு கைகெடுப்பது போன்ற செயல்.இதன் முடிவுகள் படுபயங்கரமானதாக இருக்கும்.
 
பிரபாகரனின் புதிய நாசிசவாதம் இந்த தேர்தலுடன் முன்னோக்கி வந்துள்ளது. இதனால் விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் ஒருங்கிணையும். நாடுகடந்த தமிழ் அரசுக்கான ஒருங்கிணைவும் நடக்கும்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து ஈழ நாட்டை உருவாக்க சர்வதேச ரீதியில் ஆதரவை பெறுவதற்கான விடயங்களை வடபகுதி மக்கள் புரிந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் அதற்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
 
தமிழ் சமூகம் ஜனநாயக சமூகம் அல்ல. பிரபாகரனின் துப்பாக்கிக்கு பயந்து வாக்களித்தனர். வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ் செய்திகளுக்கு அமைய மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மக்கள் பேசுவதற்கான சுதந்திரமில்லை. வெளிநாட்டு தூதரங்கள் இலங்கையின் வடக்கை ஆளுகை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இந்த முறை தேர்தலில் மூன்று மடங்கு வாக்குகளை பெற்றுள்ளது.
 
இந்திய மத்திய அரசாங்கமும் தமிழ் நாடு அரசாங்கம் போன்ற வெளிநாட்டு சக்திகள் வடக்கு மற்றும் தென் பகுதி மக்கள் ஐக்கியமாக இருந்த சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்தன என்றார்.

No comments:

Post a Comment