Thursday, September 26, 2013

மாகாண சபைகளில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெறும் வேட்பாளருக்கே முதலமைச்சர் பதவி: பிரதமர் டி. எம். ஜயரட்ன!

Thursday, September 26, 2013
இலங்கை::மாகாண சபைகளில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெறும் வேட்பாளருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தீர்மானத்தில் எவ்வித மாற்றமுமில்லை என பிரதமர் டி. எம். ஜயரட்ன தெரிவித்தார்.
 
மத்திய மாகாண சபை முதலமைச்சர் தேர்வு தொடர்பில் ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை நிராகரித்துள்ள பிரதமர், அவை அடிப்படையற்ற செய்திகளெனவும் தெரிவித்தார்.
இந்த வகையில் பல வருடங்களாக உயர் நீதிமன்ற சட்டத்தரணியாகவும், பிரதமரின் பிரத்தியேகச் செயலாளராகவும் சிறப்பாகப் பணியாற்றிய அனுராத ஜயரத்ன மத்திய மாகாண முதலமை ச்சருக்கான போதிய அனுபவமுள்ளவர் என்பதையும் பிரதமர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
 
மாகாண சபையில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெறும் அபேட்சகருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களோ, திருத்தங்களோ மேற்கொள்ளப்படவில்லை என பிரதம அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இந்தத் தீர்மானத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே எடுத்துள்ளது. அதன்பிரகாரம், பல வருடங்களாக உயர் நீதிமன்ற சட்டத்தரணியாகச் செயலாற்றும் அனுராத ஜயரத்னவுக்கு முதலமைச்சர் பதவிக்கான போதிய அனுபவம் உள்ளது.
 
அதிகமான இளைஞர்கள் பிரதமரின் தொலுவ இல்லத்திற்கு வருகை தந்து முதலமைச்சர் பதவி சம்பந்தமாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் பற்றி கேள்வி எழுப்பியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அனுராத ஜயரத்னவுக்கு 107,644 விருப்பு வாக்குகள் வழங்கியுள்ளனர். இளைய தலைமைத்துவமொன்று மத்திய மாகாணத்திற்கு அவசியம். அதற்கான சந்தர்ப்பம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
 
பிரதம அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளராக சர்வதேச தொடர்புகள் சம்பந்தமான அலுவல்களைச் சிறப்பான வகையில் மேற்கொண்ட சட்டத்தரணி அனுராத ஜயரத்ன இராஜதந்திர ரீதியாக செயற்பட்டதன் மூலமும் இந்த நாட்டில் வெளிநாட்டு முதலீட்டுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி இந்நாட்டுக்கு பாரிய சேவையை ஆற்றியுள்ளார் என்றும் பிரதமர் தெரிவித்தார். கம்பளை தொலுவ பிரதம அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மகா சங்கத்தினரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment