Tuesday, September 24, 2013

இலங்கை,தமிழக மீனவர்களிடையே பேச்சுவார்த்தை ஒரு மாதத்திற்குள் நடத்த வேண்டும்: பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கடிதம்!

Tuesday, September, 24, 2013
சென்னை:::இலங்கை,தமிழக மீனவர்களிடையே பேச்சுவார்த்தை ஒரு மாதத்திற்குள் நடத்த வேண்டும்' என,பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

மன்மோகன்சிங்கிற்கு,கருணாநிதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்,தொடர்ந்து தாக்கப்பட்டும்,மோசமாக காயமடைந்தும்,சிறைக்கு அனுப்பப்பட்டு வரும் முடிவில்லா துயரத்தை பற்றி தாங்கள் நன்கு அறிவீர்கள்.இலங்கை அரசும் அதன் கடற்படையும், வேண்டுமென்றே இப்படிப்பட்ட துன்புறுத்தல், கொடுமைப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக, தமிழக மக்களும், மீனவர்களும் நினைக்கின்றனர்.
 
தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தையை, இந்த ஆண்டு, டிசம்பர் மாதம் வைத்து கொள்ளலாம் என, ஆலோசனை தெரிவித்து, தமிழக முதல்வர் உங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது பேச்சுவார்த்தைக்கு காத்திருக்க நீண்ட நாளாகும். மேலும், கைது சம்பவங்களை தடுக்க இப்பேச்சுவார்த்தை ஒரு மாதத்திற்குள் நடத்துவதுதான் பயனுள்ளதாக இருக்கும். இதற்கிடையில், தமிழக மீனவர்களை இவ்வாறு கைது செய்வததை இலங்கை அரசு நிறுத்து மாறு இலங்கை அரசுக்கு உங்கள் சார்பில் தெரிவிக்கமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 

No comments:

Post a Comment