Tuesday, September 24, 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குரிய இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மின் அவர்களுக்கு!

Tuesday, September, 24, 2013
இலங்கை::வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு  வெற்றி பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குரிய இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மின் அவர்களுக்கு வழங்குவதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
 
அடுத்த ஆசனத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெண்ணொருவருக்கு வழங்கப்படலாமென தெரியவருகின்றது.
 
இதேவேளை போனஸ் ஆசனத்தை தனக்கு வழங்குமாறு ஆனந்தசங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு தூது அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது.
 
மேலும் ஆனந்தசங்கரிக்கு ஆசனத்தை வழங்குவது தொடர்பான பேச்சிற்கு கடும் எதிர்ப்பு ஏனைய கட்சியின் உறுப்பினர்களால் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. (ஆனந்தசங்கரியின் பாடோ பெரும் பாடு!!)

No comments:

Post a Comment