Tuesday, September 24, 2013

பொய்ப் பிரசாரங்களுக்கு மத்தியில் மக்கள் எமக்கு வாக்களிப்பு; வன்னியில் 3 ஆசனங்கள் வென்றுள்ளோம்: றிசாத் பதியுதீன்!

Tuesday, September, 24, 2013
இலங்கை::வட மாகாண சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு 3 ஆசனங்கள் கிடைத்துள்ளதாக றிப்கான பதியுதீன் தெரிவித்தார்.
வட மாகாணத்திலேயே மன்னார் மாவட்டத்தில்தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு விகிதாசார அடிப்படையில் 28.8 வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் றிப்கான பதியுதீன் தெரிவித்தார்.
 
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது;
 
அகில இலங்கை மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வவுனியாவில் போட்டியிட்ட வன்னிநாயக்கா ஐயதிலக்க என்பவரும் முல்லைத்தீவில் மொஹமட் லெப்பை ஐனுவரும் மன்னாரில் நானும் வெற்றி பெற்றுள்ளோம்.
வெற்றிபெற்ற வன்னிநாயக்கா ஐயதிலக்க அமைச்சுர் றிசாத் பதியுதீனின் இணைப்பாளராக 11 வருடங்கள் பணியாற்றியவர். ஐனுவரும் முல்லைத்தீவு மக்களுக்கு ஏற்கனவே பரீட்சயமானவர்.
 
தமிழ் இனவாத ஊடகங்கள் எங்களுக்கு எதிராரக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டன. ஆலயங்களில் இருக்க வேண்டிய மதகுருமார் வீதிகளில் நின்று அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக மக்களை தவறாக வழி நடத்தினர்.
 
அமைச்சர் றிசாத் பதியுதீன் தேர்தலின் பின்னர் முடக்கப்படுவாரென தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
செல்வம் அடைக்கலநாதன் பகிரங்கமாக அச்சுறுத்தினார். முஸ்லிம் அமைப்பொன்றும் எமக்கு எதிராக பிரச்சாரம் செய்தது
 
இந்த பிரச்சாரங்களுக்கு எல்லாம் அப்பால் சென்று மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். இது எமக்கு கிடைத்த அங்கீகாரம். எமது அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு கிடைத்த பெருவெற்றி. வடக்கு மக்களுக்கு எமது சேவை தொடரப்படும். அதற்காகவே மக்கள் எமக்கு வாக்களித்துள்ளனர். அதனால்தான 3 பிரதிநிதித்துவத்தை எமது கட்சி பெற்றுள்ளது.
 
எமது கட்சியில் சார்பில் தோல்வியடைந்த வேட்பாளர்களையும் நாம் அபிவிருத்தி நடவடிக்கையில் இணைக்கவுள்ளோம். இதுவோர் புரட்சி. மக்களுக்கு சேவை புரிவதே எமது நோக்கம். அமைச்சர் றிசாத் பதியுதீன் கரங்களை பலப்படுத்தியபடி எமது பணிகள் தொடரும்.
அத்துடன் எமக்கு வாக்களித்த சகலருக்கும், எமது கட்சி சார்பிலும், அமைச்சர் றிசாத் பதியுதீன் சார்பிலும் நன்றிகளை தெரிவிக்கிறோம்.

No comments:

Post a Comment