Tuesday, September, 24, 2013
பெர்லின்::ஜெர்மன் பாராளுமன்ற தேர்தலில் ஏஞ்சலா மெர்கல் அமோக வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் ஆகிறார்.
ஜெர்மனில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சிக்கும் எல்.பி.டி. கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதை தொடர்ந்து முடிவுகள் வெளியானது. அதில் மெரிகலின் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சி 42 சதவீதம் வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கிறது. இவரை எதிர்த்து போட்டியிட்ட எல்.பி.டி. கட்சி 26 சதவீத வாக்குகளே பெற்றிருந்தது. இன்னும் ஓட்டு எண்ணிக்கை முடிவடையவில்லை. இருந்தாலும் முடிவில் மெரிர்கலின் கட்சி அமோக வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஞ்சலா மெர்கல் கடந்த 2005 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இரண்டு தடவை பிரதமராக இருந்துள்ளார். இந்த முறையும் வெற்றி பெற்றுள்ள மெர்கல் 3 வது முறையாக பிரதமராகிறார். இவருக்கு 59 வயது ஆகிறது. இயற்பியல் வல்லுனரான இவர் கிழக்கு ஜெர்மனியை சேர்ந்தவர் கடந்த 1989-ம் ஆண்டு பெரிலின் சுவர் இடித்து வீழ்த்தப்பட்டபோது தான் இவர் அரசியலுக்கு வந்தார். தற்போது உலகில் உள்ள பலம் வாய்ந்த பெண்மணிகளில் ஒருவராக திகழ்கிறார். ஐரோப்பா கண்டத்தில் முன்பு இங்கிலாந்து முன்னாள் பெண் பிரதமர் தாட்சர் நீண்ட நாட்கள் பதவியில் இருந்தார். தற்போது அவ்ரது சாதனையை மெர்கல் தகர்த்து முன்னணியில் உள்ளார்.

No comments:
Post a Comment