Friday, September 27, 2013

ஐ.தே. க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவை கட்சியின் தலைமைத்துவத்தை விட்டும் உடனடியாக வெளியேறும்படி மாத்தளை நகரில் இரண்டு பேர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில்!

Friday, September 27, 2013
இலங்கை::ஐ. தே. க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவை கட்சியின் தலைமைத்துவத்தை விட்டும் உடனடியாக வெளியேறும்படி மாத்தளை நகரில் இரண்டு பேர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
தனது பதவிக் காலத்தை ஆறு வருடத்திற்கு நீடித்துக்கொண்ட பின் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ முகம் கொடுத்த முதலாவது தேர்தலில் ஐ. தே. க.வை சரித்திரம் காணாத தோல்விக்கு இட்டுச் சென்றுள்ளார்.
ஐ. தே. க.வின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்ட பின் ரணில் விக்கிரமசிங்ஹ 27 தடவைகள் தோல்வியடைந் துள்ளார்.
 
தொடர்ந்தும் தலைமைத்துவத்திலிருந்து கொண்டு கட்சியை அழித்துவிடக்கூடாது. எனவே பொருத்தமானவர்களின் கையில் தலைமைத்துவத்தை ஒப்படைத்து விட்டு ரணில் விக்கிரமசிங்ஹ உடனடியாக வெளியேற வேண்டும். இக்கோரிக்கையை முன்வைத்து இவர்கள் சாகும் வரை உண் ணாவிரத போராட்டத்தில் இறங்கியு ள்ளனர்.

No comments:

Post a Comment