Friday, September 27, 2013
இலங்கை::புலிகளின் தலைவர் பிரபாகரனைவிட வடக்கில் வெற்றிபெற்றுள்ள விக்னேஸ்வரன் பயங்கரமானவர். பிரபாகரனால் ஆயுதத்தைக்கொண்டு பெற முடியாததை விக்னேஸ்வரன் இராஜதந்திர ரீதியில் பெற முயற்சிக்கின்றார். எனவே இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதியும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஆயுத ரீதியில் இழந்த ஒன்றை மீண்டும் ஆயுதத்தைக்கொண்டு பெற்றுவிடலாம். ஆனால் இராஜதந்திர ரீதியில் எதனையாவது கூட்டமைப்பு பெற்றுவிட்டால் அதனை மீட்பது கடினமாகவே இருக்கும். பாகிஸ்தான் இஸ்ரேல் மற்றும் கிழக்குத் தீமோர் ஆகிய நாடுகள் இராஜதந்திர ரீதியிலேயே உருவாகின என்றும் அவர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது
வடக்குத் தேர்தல் முடிவுகளை பார்த்து இன்று பலர் அச்சமடைந்துள்ளனர். ஆனால் இவ்வாறான தேர்தல் முடிவு வரும் என்பது எமக்கு அன்றே தெரிந்திருந்தது. அதனை நாங்கள் எதிர்வு கூறியிருந்தோம்.
வடக்கு மாகாண சபையை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் வடக்கின் சில வீதிகளுக்கு பிரபாகரன் மற்றும் தமிழ்ச் செல்வன் என்று பெயர் வைத்தால் யாராலும் மாற்ற முடியாது. இது ஆபத்தான நிலைமையாகும். புலிகளின் அரசியல் பிரிவே இன்று வடக்குத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளது என்பதனை நாம் மறக்கக்கூடாது. பிரபாகரனால் ஆயுதத்தினால் செய்ய முடியாததை இராஜதந்திர ரீதியில் செய்வதற்கு இவர்களினால் முயற்சிக்கப்படும்.
அந்த வகையில் பிரபாகரன் முடித்த பயணத்தை விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்துள்ளார். தமிழ் இனவாதம் புதிய வடிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் நந்திக்கடல் நோக்கி போகவேண்டாம் என்று தமிழ் மக்களை கேட்கின்றோம்.

No comments:
Post a Comment