Sunday, September 08, 2013
இலங்கை::வடக்கு மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக இன்றைய தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை::வடக்கு மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக இன்றைய தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று காலை 6 மணி தொட
க்கம் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் டபிள்யூ.கே.ஜீ.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் நடவடிக்கையை எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் நிறைவு செய்வதற்கு தபால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
13 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் தமது பிரதேசத்திற்குரிய தபாலகத்தில் அதனை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலுக்குரிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 65 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படும் அரச வாகனங்களை கைப்பற்றுமாறு பொலிஸாருக்கு தேர்தல்கள் ஆணையாளர் பணிப்புரை!
தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படும் அரச வாகனங்களை கைப்பற்றுமாறு பொலிஸாருக்கு தேர்தல்கள் ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அரசாங்கத்திறக்கு சொந்தமான வாகனங்கள் சட்டவிரோதமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக நாளாந்தம் பல முறைப்பாடுகள் கிடைப்பதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு தேர்தல் பிரசாரங்களுக்கு அரச வளங்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இதனைப் பின்பற்றுவதற்கு ஒருசில அரச நிறுவனங்கள் தவறியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இந்த நிலைமையை அதிகம் காணக்கூடியதாக உள்ளதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்திறக்கு சொந்தமான வாகனங்களை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தேர்தல்கள் செயலகம் உத்தேசித்துள்ளது.

No comments:
Post a Comment