Sunday, September 8, 2013

மாகாண சபைகளுக்கான தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கான வெளிநாட்டு கண்காணிப்பு குழு, இந்த மாதம் 13ம் திகதி இலங்கை வருகை!

Sunday, September 08, 2013
இலங்கை::வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கான வெளிநாட்டு கண்காணிப்பு குழு, இந்த மாதம் 13ம் திகதி இலங்கை வரவுள்ளது.

தேர்தல்கள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த குழு எதிர்வரும் 14ம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தெற்காசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேட்பட்ட கண்காணிப்பாளர்கள் இலங்கைக்க வர விருப்பதாக தகவல் வழங்கியுள்ளனர்

இந்தியாவின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம்.கோபாலசாமி, மாலைதீவின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மொஹமட் பாருக் உள்ளிட்ட 20 பேரும், தேர்தல் நடைபெறவுள்ள மாகாணங்களுக்கு சென்று நேரில் பார்வையிடவுள்ளனர்.

25வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள வடமாகாண தேர்தல் தொடர்பில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அதிக கவனம் செலுத்துவர் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், மாகாண சபை தேர்தல்களில், அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன் செயலாளர் சட்டத்தரணி நிமால் புன்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகள் பக்கசார்பின்றி தேர்தல் சட்டத்திட்டங்களை நடைமுறை படுத்துகிறார்களா? என்பதை அறிந்துக் கொள்ளும் முகமாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது

No comments:

Post a Comment