Sunday, September 8, 2013

நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் 24வது மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் சிலர் ஜெனீவா சென்றுள்ளனர்!

Sunday, September 08, 2013
இலங்கை::நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் 24வது மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் சிலர் ஜெனீவா சென்றுள்ளனர்.
 
முன்னதாக இலங்கையில் இருந்
து இந்த மாநாட்டுக்கு விசேட பிரதிநிதிகள் யாரும் அனுப்பப்பட மாட்டார்கள் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.
 
இந்த மாநாடு இலங்கைக்கு முக்கியமானது இல்லை என்பதால், இதில் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையகத்துக்கான இலங்கை பிரதிநிதிகள் கலந்துக் கொள்வார் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.
 
எனினும் தற்போது இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை தேவை ஏற்படும் பட்சத்தில் இதில் கலந்துக் கொள்ள தயாராக இருப்பதாக, மனித உரிமைகள் சம்பந்தமான விசேட பிரதிநிதி, அமைச்சர் மகிந்தசமரசிங்க நேற்று கண்டியில் வைத்து தெரிவித்துள்ளார்.
 
நாளை ஆரம்பமாகி, எதிர்வரும் 27ம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் போது, தமது இலங்கை விஜயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கருத்துரைக்கவுள்ளார்.
 
எனினும் அவர் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டிலேயே தமது இலங்கை விஜயம் குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment