
Friday, September 06, 2013
இலங்கை::எதிர்வரும் 9 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகும் சந்தர்ப்பத்தில் புலம்பெயர் புலிகள் ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு எதிரில் இலங்கைக்கு எதிராக புகைப்பட கண்காட்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றிய புகைப்படங்களை கணனிகள் மூலம் மாற்றியமைத்து இந்த கண்காட்சியை நடத்த புலிகளின் வலயமைப்பு திட்டமிட்டுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவித்துள்ளன. இதற்காக ஜெர்மனியில் இருந்து புலிகளின் இரண்டு கணனி நிபுணர்கள் ஜெனிவா சென்றுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகளை ஏமாற்றுவதே புலம்பெயர் புலிகளின் நோக்கம் எனவும் திவயின கூறியுள்ளது.
No comments:
Post a Comment