Thursday, September 12, 2013
இலங்கை::இலங்கை இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நீர்க்காகம்-4 போர்ப்பயிற்சி (செப் 11) ஆரம்பமானது. இதில் முப்படைகளையும் சேர்ந்த சுமார் 2698 படையினரும் 40 வெளிநாட்டு அதிகாரிகளும் பங்கேற்பதுடன் 25 அதிவேக யுத்த விமானங்களும் பங்கேற்கின்றன.

இக்கூட்டு போர்ப்பயிற்சியில் பங்களதேஸ், பிரேசில், சீனா, இந்தியா, நேபாளம், மற்றும் பாக்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஆண்டு பயிற்சிகள் படகுத்துறைகள் மீதான தாக்குதல், உயர்பெறுமான இலக்குகள் மீதான தாக்குதல், வேவு, இலக்குகள் கண்காணிப்பு, வான்வழி நடவடிக்கைகள், கடல்வழி நடவடிக்கைகள், கடல்வழித் தரையிறக்கம், வழி கண்டறியும் குழுக்கள், எதிரியின் கோட்டைகளில் பராசூட் மூலம் குதித்தல், பதுங்கித் தாக்குதல்கள், தேடுதல் நடவடிக்கைகள், தீவிரவாத முறியடிப்பு மற்றும் பிணைக்கைதிகள் மீட்பு, உள்ளிட்டவற்றை மையப்படுத்தி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment