Thursday, September 12, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக சிங்கள மக்களை குழப்பும் விதமான தேவையற்ற அறிக்கைகளை வெளியிடாது அரசாங்கம் தனது அதிகாரபூர்வ நிலைப்பாட்டை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி உட்பட அரசாங்கம், தமிழ்த் தே
சியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக அமைதியான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருவது அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை அரசாங்கம் ஏற்று கொண்டுவிட்டது என்ற செய்தியை உலகத்திற்கு வழங்கியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 157 ஷரத்து மீறப்பட்டுள்ளது.
இதன் ஊடாக சர்வதேசத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதே தவிர வேறொன்றுமில்லை.
வடக்கு மாகாண சபை ஏற்படுத்தப்பட்ட பிறகு மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைக்கும் இடையில் இரத்தம் சிந்த வைக்கும் முயற்சியே மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் சிங்கள மக்களை குழப்பும் வார்த்தைகளை கூறிக்கொண்டிருக்காது, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உடனடியாக நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment