Thursday, September 12, 2013
சென்னை::கச்சத்தீவில் வர்த்தக கண்காட்சி மத்திய நிலையம் ஒன்றை நிறுவதற்கான ஏதுநிலைகள் தொடர்பில் இலங்கையும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய மத்திய அமைச்சர் சுதர்ஷன நாச்சியப்பரை மேற்கோள்காட்டி, த நிவ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பொருளாதார தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளும் பொருட்டு, இந்தி திட்டம் குறித்து ஆலோசிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கச்சத்தீவின் அதிகாரம் தொடர்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த வழக்கு இந்திய உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்த வர்த்தக கண்காட்சி மத்திய நிலையத்தை அமைப்பது குறித்து இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் சுதர்ஷன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment