Friday, September 06, 2013
இலங்கை::மக்கள் பூரண சுதந்திரத்துடன் வாழும் ஒரு நாடாக இலங்கை இன்று மாறியிருக்கிறது. 30 ஆண்டுகாலம் நம்நாட்டு மக் கள் புலிகளின் படுபயங்கரமான அச்சுறுத்தல்களினால் நாளாந்தம் உயிரை கையில்பிடித்து வாழ்ந்து கொண்டிருந்தார் கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மட்டுமன்றி நாடெங்கிலும் உள்ள மக்கள் அனைவரும் புலிகளின் கொடுமைகளினால் எந்நேரமும் உயிரிழக்க லாம் என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். புலி பயங்கரவாதிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டு மன்றி தென்னிலங்கையிலும் நாட்டின் தலைநகரமான கொழும்பி லும் துணிச்சலுடன் வந்து தற்கொலை குண்டுதாரிகளின் தாக்கு தல்கள் மூலம் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை பறிக்குமளவுக்கு கொடுமைக்காரர்களாக இருந்தார்கள்.
நாட்டின் பொருளாதார மையமான இலங்கை மத்தியவங்கி தலை மையகத்தின் மீதான தாக்குதல் இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிடும் என்று புலி பயங்கரவாதிகள் நம்பியிரு ந்த போதிலும் அவர்கள் ஏமாற்றமடைந்தார்கள். இலங்கை மத்திய வங்கி அழிவடைந்த சாம்பலில் இருந்து வங்கியின் வளர்ச்சிக்கு ஒரு புதிய சகாப்தம் உதயமாகியது. அதன் மூலம் வங்கியின் தற் போதைய ஆளுநர் அஜித்நிவாட் கப்ராலின் சிறந்த ஆளுமைத் திறன் மூலம் இன்று நாட்டின் பொருளாதாரம் பன்மடங்கு வளர் ச்சியடைந்துள்ளது. 2015ம் ஆண்டில் இலங்கையில் தனிநபர் வருமானம் 4,000 அமெரிக்க டொலராக உயருமென்று ஆளுநர் சமீபத்தில் அளித்த பேட்டியில் வலியுறுத்தியிருக்கிறார்.
இவ்விதம் பல்வேறு அழிவுகளை எதிர்நோக்கிய எங்கள் நாட்டில் இப்போது ஜனாதிபதி அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு அமைதியும், சமாதா னமும் நிலைபெற்றிருக்கிறது. இலங்கை இராணுவம் மூன்றாவது வருடமாக ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு கருத்தரங்கு 2013ல் தலைமை உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஆரம்பமானது. அங்கு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இன்று வடக்கில் முழுமையான சிவில் நிர்வாகம் நடைபெறுகி றது.
சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடுகிறதென்ற குற்றச் சாட்டுகள் ஆதாரமற்றவை.
இராணுவம் வடபகுதியின் பாதுகாப் புக்கு உத்தரவாதம் அளிக்கும் பணியை மாத்திரமே செய்து வரு கிறதென்று கூறினார். முன்னர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து வந்த பொலிஸ் திணை க்களம் இன்று ஜனாதிபதியின் கீழ் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சிவிலியன் அமைப் பாக பொலிஸ்படை செயற்படுகிறதென்று தெரிவித்த பாதுகாப்பு செய லாளர் இலங்கை இந்திய உறவு இன்று மிகவும் வலுப்பெற்று விளங்குகிறது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்கள் சுயநல நோக்கத்திற்காக அர சியல் இலாபம் தேடுவதற்காக போலிப் பிரசாரங்களை செய்தாலும் அவை இந்திய மத்திய அரசிடம் எடுபடாது என்றும் கூறி னார்.
இந்தியாவுடன் நாம் நல்லுறவை வைத்திருக்கும் அதே வேளையில், இலங்கை சீன உறவையும் எமது நாடு வளர்த்து வருகிறது. இந்த நல்லுறவு எந்தவொரு நாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையாது என்று தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை தூண்டிவிட்டு நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்த ஒரு சாரார் முயற்சி எடுத்துவருகிறார்கள் என்றும் அர சாங்கம் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.
வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் இப்போது ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறதென்று தெரிவித்த பாதுகாப்பு செய லாளர் கோத்தபாய ராஜபக்ஷ, யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த சிவில் நிர்வாகம் தற் போது முழுமையாக பொலிஸாருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படுகிறதென்று தெரிவித்த அவர், தற்போது வடபகுதியில் அபிவிருத்திப் பணிகளில் ஈடு பட்டு வரும் இராணுவத்தினர் மக்களின் நல்லெண்ணத்தை வென்று அவர்களின் நெருங்கிய நண்பர்களாக பல விதத்திலும் உதவி செய்கிறார்கள் என்றும் கூறினார். நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்த ஒருசாரார் முயற்சி செய்கிறார்கள் என்பது எமக்கு நன்கு தெரியும். இது தொடர்பாக நாம் அவதா னத்துடன் செயற்படுகிறோம். தேசிய ஐக்கியம் மற்றும் உண்மை யான பொருளாதார அபிவிருத்தி இலக்கை அடையும் எண்ணத் துடன் செயற்பட்டு வரும் இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு சவால்கள் முட்டுக்கட்டையாக இருக்கின்றன.
இவைதான் நாம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை என்றும் தெரிவித்தார். எமது அரசாங்கம் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் என்றுமே இட மளிக்கப் போவதில்லை. இனவாதத்தையும், மதவாதத்தையும் ஏற் படுத்தும் முயற்சியில் ஈடுபடும் துஷ்டர்களை இனங்கண்டு அவ ர்களை தண்டித்து இந்நாட்டு மக்கள் அனைவரும் சரிசமமான உரிமைகளைக் கொண்ட மக்களாக வாழ்ந்து சகல ஜனநாயக உரிமைகளையும் அனுபவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இலட் சியக்கனவாக அமைந்திருக்கிறதென்றும் பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறினார்.


No comments:
Post a Comment