Friday, September 06, 2013
இலங்கை::ஜனநாயக நாடொன்று வெளிநாடுகளின் உதவிகளின்றி புலிபயங்கரவாதத்தை எவ்வாறு முறியடிக்க முடியும் என்ற வழியை எமக்கு காண்பித்த நாடு இலங்கையாகும். இதற்காக பிராந்திய நாடுகள் இலங்கைக்கு விஷேடமாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக இந்திய ஜனதா கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டொக்டர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்தார்.
இஸ்ரேல் இராணுவத்தின் வினைத்திறனை மிஞ்சும் அளவுக்கு இலங்கை இராணுவம் திறமையானதாக மாறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் நாட்டிலிருந்து இலங்கை தொடர்பில் வெளியாகும் செய்திகளை பார்க்கும் போது முழு இந்தியாவும் எதிர்க்கின்றது என்ற உணர்வு இலங்கையர்களுக்கு ஏற்படலாம். ஆனால், உண்மையான நிலைமை அவ்வாறு இல்லை என்றும் டொக்டர் சுப்பிரமணியம் சுவாமி சுட்டிக் காட்டினார்.
இலங்கை இராணுவம் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் பாதுகாப்பு கருத்தரங்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக்கவின் தலைமையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.
முரண்பாட்டுக்குப் பின்னரான இலங்கை; சவால்களும் பிராந்திய உறுதிப்பாடுகளும்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த கருத்தரங்கின் இறுதி நாளான நேற்று விஷேட உரை நிகழ்த்திய டொக்டர் சுப்பிர மணியம் சுவாமி மேலும் உரையாற்றுகையில்:-
2009ம் ஆண்டு மே மாத நடுப்பகுதியில் இலங்கை ஆயுதப்படையினர் மிலேச்சத்தனமான கொலைகார பயங்கரவாத இயக்கமான புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் அந்தப் புலி பயங்கரவாத இயக்கத்தை துவம்சம் செய்யும் சாதனையை புரிந்தது. அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை மற்றும் அவரது பிரதான தளபதிகளும் 2009 மே மாதம் 19ம் திகதியன்று மரணமடைந்ததுடன் இலங்கையின் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற இரத்த ஆற்றுக்கு வழியமைத்த பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
எனவே, மே மாதம் 19ம் திகதியன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட வெற்றித்தினமாக அனைவரும் நினைவு கூர வேண்டும் என்று தெரிவித்தார். இந்த வெற்றியை அடைவதற்கு இலங்கை ஆயுதப்படையினர் மாபெரும் தியாகங்களை புரிந்ததாகவும் இத்தகைய மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளுக்கு எதிராக சிவில் சமூக அமைப்பு உலக ரீதியில் மேற்கொண்ட போராட்டமும் இந்த வெற்றிக்கு உறுதுணை புரிந்தது என்று கூறினார்.
இந்த நாட்டுக்கு அரசியல் தலைமை த்துவத்தை வழங்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே இந்தப் பாராட்டு சாரும். அதி உன்னத நோக்கத்திற்காக உயிர்த்தியாகம் செய்தாவது இந்த யுத்தத்தில் நாம் வெற்றி பெற வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் ஆயுதப்படையினருக்கு அளித்த ஊக்குவிப்பும், உறுதுணையுமே பிரதான காரணமென்று அவர் குறிப்பிட்டார்.
யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவி செய்தன. இதற்கென இந்தியாவுடன் விசேட பரஸ்பர பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒத்துழைப்பை பெறுவதற்காக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர்களை கொண்ட 6 உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தியத் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளிவிவகார செயலாளர், பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இடம்பெற்றனர். இக்குழு மிகவும் இரகசியமான முறையில் யுத்தம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது உடனுக்குடன் தீர்மானம் எடுத்து அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றியது.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரும், அன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சருமான கருணாநிதி அவர்களுக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தின் முன்னேற்றம் பற்றி அடிக்கடி எடுத்துரைக்கப்பட்டது. பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்படுவது கூட கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது. கருணாநிதி அவர்கள் மதிநுட்பத்துடன் நிலைமையை உணர்ந்து இந்த விடயத்தில் தலையிடவில்லை என்றும் டொக்டர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார்.
புலிகள் துவம்சம் செய்யப்பட்டதனால் நாட்டின் நாலா பக்கங்களிலும் அவ்வியக்கம் அப்பாவி பொதுமக்களை தமிழர், சிங்களவர் என்ற பேதமின்றி குண்டுத்தாக்குல் மூலமும், தற்கொலை குண்டுத்தாக்குதல் மூலமும் படுகொலை செய்வது பூஜ்ஜிய நிலைக்கு திரும்பியது என்று கூறினார்.
என்னை சந்தித்த பல தமிழ் குடும்பங்கள் இனிமேல் தங்கள் பிள்ளைகளை புலிகள் பலவந்தமாக கடத்திச் செல்லும் என்ற பயம் தங்களுக்கு நீங்கிவிட்டதென்றும் அதன் பின்னர் பல்வேறு துஷ்பிரயோகங்களும் மறைந்துவிட்டன என்றும் கூறினா¡ர்கள்.
புலிகள் பயங்கரவாதிகள் மக்களிடம் இருந்து பணத்தை அபகரிக்கும் துஷ்ட செயல்களும் நிறைவு பெற்றன. இன்று தமிழர்களின் வாழ்க்கை அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. ஐக்கிய இலங்கையின் கீழ் தமிழ் மக்களுக்கு அரசியல்சாசனத்தின்படி அதிகாரப் பரவலாக்கல் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இனரீதியிலான ஒரே வகையான தொடர்பு இருக்கிறது என்று தெரிவித்த அவர், வெளிநாட்டு சக்திகளும் வெளிநாட்டில் உள்ள சில அமைப்புகளும் இலங்கைக்கு ஆலோசனை தெரிவிக்கும் அநாவசியமான தலையீடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் யுகம் இன்று தோன்றியிருக்கிறதென்றும் கூறினார்.
இலங்கை அரசாங்கம் தீர்மானிக்கும் பட்சத்தில் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் சில சமஷ்டி கொள்கைகளை இணைக்கக்கூடிய வகையில் இலங்கை பாராளுமன்றம் தீர்மானித்தால் இந்தியாவில் உள்ள நாம் அதற்கு ஆதரவளிப்போம்.
இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடும் என்று தமிழர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழ் அல்லது சார்க் அமைப்பின் கீழ் ஏதாவது பரஸ்பர உடன்படிக்கைகள் நிறைவேற்றப்படும் போது மாத்திரமே இந்தியா இவற்றில் சம்பந்தப்படும்.
1991ம் ஆண்டில் இலங்கை ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ இந்தியாவுக்கு ஆதரவளிக்காமல் புலிகள் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் கொடுத்து அவ்வியக்கத்தை இந்திய அமைதிகாக்கும் படையுடன் மோதவிட்டார். இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ்காந்தியை கொலை செய்த முருகனும், தற்கொலை குண்டுதாரியும் இந்த கொலையை செய்வதற்கு முன்னர் பல தடவைகள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பயணம் செய்திருப்பது இப்போது தெரியவந்திருப்பதாக அவர் சொன்னார்.
1991ம் ஆண்டில் இலங்கை ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ இந்தியாவுக்கு ஆதரவளிக்காமல் புலிகள் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் கொடுத்து அவ்வியக்கத்தை இந்திய அமைதிகாக்கும் படையுடன் மோதவிட்டார். இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ்காந்தியை கொலை செய்த முருகனும், தற்கொலை குண்டுதாரியும் இந்த கொலையை செய்வதற்கு முன்னர் பல தடவைகள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பயணம் செய்திருப்பது இப்போது தெரியவந்திருப்பதாக அவர் சொன்னார்.
புலிகள் அழித்தமை குறித்து தமிழ்நாட்டு மக்களும் குறிப்பாக இந்தியர்களும் இந்தியாவில் புலி பயங்கரவாதிகளின் தொல்லை ஒழிக்கப்பட்டமைக்காக இலங்கை இராணுவத்தினருக்கும் இலங்கையின் அரசியல் தலைமைத்துவத்திற்கும் தங்கள் நன்றியை தெரிவிக்கிறார்கள் என்று கூறினார்.
இந்தியாவில் உள்ள நானும் என்னைப் போன்ற பெரும்பாலானோரும், தமிழர்களும் சிங்களவர்களும் இரண்டு வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும் இனரீதியில் ஒன்றுபட்ட சமூகம் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம். இதனை ரிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தலாம். கடந்த 12 நூற்றாண்டுகளாக இந்து மதமும், பெளத்த மதமும் சமாதானமாக தலைத்தோங்குகின்றன.புத்த பெருமான் பிறப்பில் ஓர் இந்து. அவர் ஒரு சீர்த்திருத்தவாதி. இன்று இந்துக்கள் புத்தபெருமான் தங்களுக்கு சொந்தமானவர் என்று அவரை வணங்குகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட ஓர் அரசாங்கத்தின் ஜனாதிபதி என்ற முறையில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கொலை வெறி பிடித்த பயங்கரவாத இயக்கமான புலிகள் அழித்தது ஒரு சட்டப்பூர்வமான செயல். இதனால் இன்று இலங்கை பொருளாதார ரீதியிலும் கலாசார ரீதியிலும் மறுமலர்ச்சி அடைந்து வருவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் டொக்டர் சுப்ரமணிய சுவாமி மேலும் தெரிவித்தார்.


No comments:
Post a Comment