Saturday, September 14, 2013

பாகிஸ்தான் நீதிமன்ற குழு 23-ம் தேதி இந்தியா வருகை!

Saturday,September,14, 2013
புதுடெல்லி::மும்பை தாக்குதல் வழக்கு விசாரணைக்காக பாகிஸ்தான் நீதிமன்ற குழு வரும் 23 ம் தேதி இந்தியா வருகிறது.
 
மும்பையில் பாகிஸ்தான் தீவி   ரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஏற்கனவே மும்பை நீதிமன்றம் விசாரித்தது. இதில் பாகிஸ்தான் தீவிரவாதி அப்துல் கசாப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.
 
இதற்கிடையே மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து பாகிஸ்தான் நீதிமன்றமும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மும்பை வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
 
இதை தொடர்ந்து வருகிற 23 ம் தேதி பாகிஸ்தான் நீதிமன்ற குழு இந்தியா வருகிறது. மேலும் பாகிஸ்தான் தரப்பில் வாதாட வக்கீலையும் பாகிஸ்தான் அரசு நியமித்துள்ளது என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

No comments:

Post a Comment