Saturday,September,14, 2013
இலங்கை::தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த வகையில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தேர்தல் தொடர்பில் கட்சிகளினாலோ சுயேச்சைக் குழுக்களினா லோ வேட்பாளரினாலோ வெளியிடப்படும் எந்தவொரு பிரசாரங்களையும் முன்னெடுக்க கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்படி தேர்தல் பிரசாரங்கள், அரசியல் விளம்பரங்கள், அறிக்கைகளுக்கு, 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் பிரசுரிப்பதற்கும், ஒலி, ஒளி பரப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டு ள்ளது.
தேர்தல்கள் ஆணையாளருக்கும், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது!
தேர்தல்கள் ஆணையாளருக்கும், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகள், கட்டவுட்கள் அனைத்தையும் எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் இதன்போது பணிப்புரை விடுத்துள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் ஆலோசகர் பந்துல குலதுங்க தெரிவித்துள்ளார்.
சுதந்திரமானதும், நீதியுமான தேர்தலை நடத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த விசேட சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ் விசேட சந்திப்பில் கலந்துகொண்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தமது அதிகாரப் பிரிவிற்குள் இடம்பெறுகின்ற தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தேர்தல்கள் ஆணையாளருக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.
தேர்தல் நடவடிக்கைகளில் நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின் பின்னரும் வன்முறைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கும் தடைவிதிக்கப்படுவதாக தேர்தல்கள் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது

No comments:
Post a Comment