Thursday, September 19, 2013

16 தமிழக மீனவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நன்றி!

Thursday, September 19, 2013
சென்னை::சர்வதேச எல்லையில் மீன்பிடித்தக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு 9 மாதங்களாக ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 16 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு, சென்னை வந்த அவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர் அவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகையாக முதல்வர் வழங்கினார்.
 
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், சவுதி அரேபிய நாட்டிலிருந்து தனியார் மீன்பிடி கப்பலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தவறுதலாக ஈரான் நாட்டு கடல் எல்லைப்பகுதிக்குள் சென்றதன் காரணமாக கைது செய்யப்பட்டு, 16.9.2013 அன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் சந்தித்து, தங்களை விடுவிக்க உறுதியான நடவடிக்கை எடுத்தமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டனர். அப்போது, அம்மீனவர்களின் வறுமை நிலையினைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா  16 மீனவர்களுக்கும் தலா1 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.

No comments:

Post a Comment