Wednesday, September 18, 2013
இலங்கை::உலக நாடுகள் இலங்கை விவகாரத்தில் தேவையின்றி தலையீடு செய்யக் கூடாது என புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை::உலக நாடுகள் இலங்கை விவகாரத்தில் தேவையின்றி தலையீடு செய்யக் கூடாது என புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாகத் தெ
ரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என அவர் கோரியுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ இராச்சியம் தற்போது கொள்கை மாறிச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சி திருவையாறு செஞ்சோலையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த கேபி வட்டுக் கோட்டை தீர்மானம், ஒஸ்லோ உடன்படிக்கை ஆகியவற்றின் மறு வடிவமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் என அறிவித்துள்ளார்..
வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனமானது மிகவும் வலிமையானதாக அமைந்துள்ளது. வடக்கின் இளைஞர்களை மீண்டும் ஒருமுறை ஆயுதம் ஏந்துவதற்கான மறைமுகமான கோரிக்கையினையே விக்னேஸ்வரன் முன்வைத்துள்ளார் என குமரன் பத்மநாதன் (கே.பி.) தெரிவித்தார்.
மேலும் நாடு கடந்த தமிழ் ஐக்கியத்தை உருவாக்கியதே நான் தான். அதன் விளைவுகளை பின்னரே நான் உணர்ந்து கொண்டேன் எனவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று இராணுவத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments:
Post a Comment