Saturday, September 28, 2013

புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்த: புலி ஆதரவாளர் சுரேஸ் சிறிஸ்கந்தராஜாவுக்கு அமெரிக்காவில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Saturday, September 28, 2013
வாஷிங்டன்::புலி ஆதரவாளர் ஒருவருக்கு அமெரிக்காவில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையச் சேர்ந்த கனேடிய பிரஜையான
சுரேஸ் சிறிஸ்கந்தராஜா என்ற நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அமெரிக்க சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
 
புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக குறித்த நபர் நீதிமன்றில் ஒப்புகொண்டிருந்தார். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறித்த சர்ச்சையை தற்போது காணப்படுகின்றது. தண்டனைக் காலத்தை குறைக்குமாறு சுரேஸின் சட்டத்தரணிகள் கோரி வருகின்றனர்.
 
உச்சபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அரச சட்டத்தரணிகள் கோரி வருகின்றனர். எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி சுரேஸிற்கான தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.
 

No comments:

Post a Comment