Wednesday, September 04, 2013
ராமேஸ்வரம்::இலங்கை சிறையில் உள்ள 141 பேரை விடுவிக்கக்கோரி பாம்பன் மீனவர்கள் இன்று 8வது நாளாக கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களை இலங்கையில் உள்ள பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து ஆக.25ம் தேதி தொழிலுக்குச் சென்ற விசைப்படகு மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 4 விசைப்படகுகளில் இருந்த 35 மீனவர்களை சிறைப்பிடித்து சென்றனர். புத்தலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 35 மீனவர்களை விடுவிக்கக்கோரி பாம்பன் மீனவர்கள் கடந்த 27ம் தேதி கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இன்றுடன் 8வது நாளாக தொழிலுக்குச் செல்லாமல் பாம்பன் கடல் பகுதியில் ஏராளமான விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாம்பன் மீனவர்கள் விடுவித்தல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து முறையிட பாம்பன் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சிப்பி சேசு, நிரபராதி மீனவர்கள் விடுவிப்பு கூட்டமைப்பு தமிழக பிரதிநிதி அருளானந்தம் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
கடந்த ஜூலை 30ம் தேதி காலை, 31ம் தேதி அதிகாலை இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த நாகபட்டினம், காரைக்கால் மீனவர் 65 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம், திரிகோணமலை சிறைகளில் உள்ளனர். ஜூன் 5, ஜூலை 15ம் தேதிகளில் தொழிலுக்குச் சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 41 பேர் வவுனியா சிறையில் உள்ளனர். ஆக.22ம் தேதி சிறைப்பிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேர் புத்தலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 141 பேரையும் விடுவிக்கக்கோரி மீனவர்களின் உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். ராமேஸ்வரம், பாம்பன், நாகை மீனவர்கள் கடந்த சில வாரங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய தூதரக அதிகாரிகள் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். குறைந்த அபராதம் விதித்து மீனவர்களுக்கு விடுவிக்கும் வகையில் இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் விடுதலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை, காரைக்கால் மீனவர்கள் 35 பேரை, பருத்தித்துறை நீதிமன்றத்தில் இலங்கை போலீசார் இன்று ஆஜர்படுத்த உள்ளனர். இம்முறையாவது மீனவர்கள் விடுவிக்கப்படுவர் என அவர்களது உறவினர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மீனவர்கள் விடுதலை தாமதமாவதால் இலங்கை கடற்படையின் சிறைபிடிப்புக்கு அஞ்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்க முடியாமல் தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழில் நசிந்து வருவதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

No comments:
Post a Comment