Wednesday, September 04, 2013
இலங்கை::தமிழ் கடும்போக்குவாதம் வெளிநாடுகளில் தொடர்கின்றது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தமிழ் கடும்போக்குவாதம் தொடர்வாகவும் இது நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து நான்;கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு பாதுகாப்பு கருத்தரங்கில் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு வழிகளில் நாடு சவால்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
புலிகள் தொடர்ந்தும் நாட்டில் இயங்கி வந்திருந்தால், இலங்கைக்கு மட்டுமன்றி பிராந்திய வலய நாடுகளுக்கே அச்சுறுத்தலாக அமைந்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களிடமிருந்து அரசாங்கத்தை விலக்க உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இராணுத்தினர் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுவதனை சிலர் இராணுவ மயப்படுத்தலாக பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment